பிரதான செய்திகள்

Tuesday, September 13, 2016

ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற மாணவரத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் விழா



சென்ற கிழமை #அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற மாணவரத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் விழா நடைபெற்றது.

அதன் போது #எனது தம்பிக்கு #எனது தந்தையால் சின்னம் 
அணிவிக்கப்பட்டதும் #அதிபரால் நியமனக் கடிதம் தரப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...

Monday, September 12, 2016

மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்களில் தொழுகைக்கு அனுமதியில்லை!




சவூதி அரேபியா முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் வழக்கமாக தவாஃப் செய்யும் பகுதியில் ஹஜ் காலம் முடியும்வரை தொழுகைக்கு அனுமதி இல்லை.


மக்கா பிரதேச கவர்னர் இளவரசர் காலித் அல் பைஸல் அவர்களின் உத்தரவின்படி, ஹஜ் யாத்ரீகர்கள் சங்கடங்கள் இன்றி வசதியாக தவாப் செய்திடும் வகையில் (ஆகஸ்ட் 25) முதல் ஹஜ் காலம் முடியும் வரை, புனித மடஃப் (Mataf) எனும் தவாப் சுற்றும் பகுதியில் மட்டும் தொழுகைக்கான அனுமதி கிடையாது.


ஹஜ் யாத்ரீகர்களும் இன்ன பிறரும் பள்ளியின் உள் வளாகங்களிலும், மாடிகளிலும், சுற்றுப்புறங்களிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதே உத்தரவு புனித ரமலான் காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 15, 2015

பாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை


பாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப்பு துப்பாக்கிச் சண்டை காட்சிகள் வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

பாரிஸ் நகரின் பாட்டகிலான் தியேட்டரில் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.அப்போது அவர்களுடன் கலந்து இருந்த தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் தியேட்டரின் வெளிப்புறம் இருந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

அந்த பரபரப்பு வீடியோ இங்கே…

              

Sunday, October 25, 2015

பெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….??



பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.

டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??

பெண் :- என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிறு. அடுத்த வாரம் என்னை வந்து பார்

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.

பெண் :- நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்….!

டாக்டர் :- நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா என்றார்.

பெண்…..!

சொய்ஸா கொலை தொடர்பில் சி.சி.டீ.வி. தடயங்கள்



பிரபல கராட்டே வீரரும் இரவு விடுதியின் சொந்தக் காரருமான வசந்த சொய்ஸா கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவரது கொலை தொடர்பான தடயங்கள் சீ.சீ.டி.வி. ஊடாகப் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ‘கடபணஹ’ பகுதியிலுள்ள இவரின் இரவு விடுதியில் நேற்று முன்தினம்(24) இரவு 11.45 மணியளவில் தலைக் கவசங்களுடன் வந்த கும்பலொன்று ஆயுதங்களினால் இவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வடமத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ விஜே குணவர்தன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பத்மசிறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதுல வீர சிங்க ஆகியோரின் உத்தரவில் தொடர்ந்தும் மேலதிக விசாரணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யுத்த காலத்தில் பாதுகாப்புக்கே பங்கர் அமைக்கப்பட்டது-மஹிந்த ராஜபக்ஷ



பாதுகாப்பு நோக்கத்துக்காகவே நிலத்துக்குக் கீழ் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெறும் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே இந்த நிலத்துக்குக் கீழ் அறைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் நேற்று கொழும்பு அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கூறியுள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையுடன் இணைந்ததாக நிலத்துக்குக் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு மாளிகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.



இந்த கட்டடம் நிலத்துக்குக் கீழால் இரண்டு மாடிகளும், நிலத்துக்கு மேலால் இரண்டு மாடிகளும் அமையப் பெற்றுள்ளன. ஒரு மாடியின் பரப்பளவு 3 ஆயிரம் சதுர அடிகளாகும். நான்கு மாடிகளும் 12 ஆயிரம் சதுர அடிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நான்கு மாடிகளுக்கும் இலத்திரனியல் இறக்கு ஏறு தளங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், முழு மாளிகையும் குளிரூட்டப்பட்டு 24 மணி நேரமும் இடைவிடாது செய்பட்டு வந்துள்ளது.

இந்த கட்டிடத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரையில் சுரங்கப் பாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிகள் முடிவடையாது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் நிர்மாணப்பணிகள் இராணுவத்தினரைக் கொண்ட விசேட படைப் பிரிவு ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்கள் ஒவ்வொன்றினதும் அகலம் 4 அடிகள். இதன் சுவர்களுக்கு பலமான கம்பிகள் போடப்பட்டுள்ளன. கூரைக்குப் போடப்பட்டுள்ள கொங்கிரீட்டின் அகலமும் 4 அடிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கட்டிடத்தில் போடப்பட்டுள்ள தளபாடங்கள் யாவும் இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண் கலங்க வைத்தது உண்மை இது!!!

ஒருநாள் தாய் தன் மகனிடம்

கேட்கிறாள்..... மகனே..நான் கண் தெரியதவளாய் இருந்தால் நீ என்ன செய்து இருப்பாய் என்று...?

அதற்கு மகன் நான், சிகிச்சைக்காக உலகின் சிறந்த கண் மருத்துவ டாக்டரை
நாடி இருப்பேன் என்று பதில்
கூறினான்.....

சிறிது நேரம் அதே கேள்வியை பிறகு அவரது தாயிடம் மகன் கேட்டு பார்த்தான்

"நான் கண் தெரியாதவனாய்
இருந்தால் நீங்கள் என்ன செய்து இருந்திருப்பிர்கள்"
என்று.

அதற்கு அந்த தாய்
பொறுமையாக பதில்
கூறினாள்.....

நான் என் இரண்டு கண்களையும் உனக்கு தானமாக கொடுத்திருப்பேன் " என்று.....

பார்த்தீர்களா தாய்ப்பாசம் தாய்க்கு நிகராக
யாரும் இல்லை